கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தருமகிரி அரசு ஆரம்ப பள்ளி அருகே மின்கம்பத்தை அங்குள்ள மரத்தின் கிளைகள் முழுமையாக மறைத்து உள்ளன. இதனால் அதில் உள்ள தெருவிளக்கு வெளிச்சம் அந்த பகுதிக்கு கிடைப்பது இல்லை. இதன் காரணமாக இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த மின்கம்பத்தை சூழ்ந்துள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.