கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய முத்தூர் பஞ்சாயத்தில் துவாரகாபுரி கிராமத்தில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றுகின்றன. மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.