வாகனங்களால் இடையூறு

Update: 2026-11-01 14:15 GMT

கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தேவர்சோலை கிராம நிர்வாக அலுவலகத்தின் முன்பு தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அங்கு கிராம நிர்வாக அலுவலரை சந்திக்க வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக எளிதாக அலுவலகத்துக்குள் சென்றுவர முடியாத நிலை உள்ளது. எனவே அங்கு வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்த அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்