கோத்தகிரி நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ஈளாடா தடுப்பணை உள்ளது. இதன் அருகில் அமர்ந்து சமூக விரோதிகள் சிலர் மது குடித்து வருகின்றனர். பின்னர் போதை தலைக்கேறியதும் பிளாஸ்டிக் பொருட்கள், காலி மது பாட்டில்கள், மீதமான உணவுகளை அங்கேயே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. அத்துடன் தடுப்பணை தண்ணீர் மாசுபடும் அபாயம் காணப்படுகிறது. எனவே அப்பகுதியில் சமூக விரோதிகள் நுழையாத வகையில் கம்பி வேலி அமைக்க வேண்டும்.