தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் போலீஸ் சரகத்திற்குள், 21 தாய் கிராமங்கள் மற்றும் 123 கிராமங்கள் என 144 கிராமங்கள் வருகிறது. காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் போதுமான போலீசார் இல்லாததால், பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக விசாரிக்க முடியாமல் காலதாமதம் ஏற்படுவதுடன், பொதுமக்களை அலைக்கழிக்கும் நிலை காணப்படுகிறது. எனவே, காரிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு கூடுதலாக போலீசாரை அரசு நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.