மூடப்பட்ட ஆவின் நிலையம்

Update: 2026-11-01 14:05 GMT

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு அத்தியாவசிய தேவையான பால் குறைந்த விலையில் வழங்க பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையத்தில் ஆவின் பாலகம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆவின் நிறுவனத்தால் திறக்கப்பட்டது. ஆனால் கடந்த ஓராண்டாக இது மூடியபடி காட்சி பொருளாகவே உள்ளது. எனவே பஸ் நிலையத்தில் உள்ள ஆவின் நிலையத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்