தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் ஆண்டிப்பட்டி கிராமத்தில் உள்ள நாயக்கன் ஏரியில் கரையின் மேல் தார்சாலை செல்கிறது. இந்த சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் பள்ளி வாகனங்கள், பொதுமக்கள் உள்பட பலர் கடந்து செல்லும்போது ஏரிக்கரையில் இருந்து தவறி கீழே விழுந்து ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆண்டிப்பட்டி நாயக்கன் ஏரிக்கரையின் 2 புறங்களிலும் பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.