பஸ் நிலையம் ஆக்கிரமிப்பு

Update: 2026-11-01 13:44 GMT

தம்மம்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து சேலம், கோவை, நாமக்கல், முசிறி, திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, சென்னை, பெங்களூரு மார்க்கங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் தினமும் ஏராளமான பயணிகள், தம்மம்பட்டி பஸ் நிலையம் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக பயணிகள் காத்து நிற்கும் இடங்களில், இருசக்கர வாகனங்கள், தள்ளுவண்டிகளை நிறுத்தி வைத்து, ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பயணிகள் கடும் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்