நாய்கள் தொல்லை

Update: 2026-11-01 09:26 GMT

பெருமாநல்லூரில் இருந்து குன்னத்தூர் செல்லும் சாலை பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். பகல் நேரங்களில் கூட்டமாகச் சுற்றுவதால், இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். சில இடங்களில் தெருநாய்கள் வாகனங்களைத் துரத்துவதால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

குமார், குன்னத்தூர்.

மேலும் செய்திகள்