கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் இருந்து காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் புகளூரான் வாய்க்காலின் இடது கரை கான்கிரீட் தடுப்பு சுவர் உடைந்து மண் சரிவு ஏற்பட்டு இருந்தது. இதனால் கால்வாயில் உடைப்பு ஏற்படும் அபாயம் இருந்தது. இதுபற்றிய செய்தி 'தினத்தந்தி' நாளிதழின் புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து வாய்க்காலில் ஏற்பட்ட மண் சரிவு பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிக தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.