சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டியில் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை உள்ளிட்ட எந்தவித செல்போன் சேவைகளும் முறையாக கிடைப்பதில்லை. அடிக்கடி செல்போன் டவர் சிக்னல் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் அவசர காலத்தில் செல்போனில் யாரையும் தொடர்புகொள்ள முடிவதில்லை. அதோடு இணையதள சேவையும் கிடைக்காமல் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக செல்போன், இணையதள சேவை பாதிப்பை சரி செய்ய வேண்டும்.