பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சேலம் செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் பயணியர் நிழற்கூடம் உள்ளது. ஆனால் திப்பம்பட்டி, கம்மாளப்பட்டி, ஜல்லூத்துப்பட்டி, திருமனூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்கள், கால்நடை மருந்தகம் முன் நின்று பயணிகளை ஏற்றிச்செல்கின்றன. அங்கு பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் எதிர்புறம் உள்ள நிழற்கூடத்தில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அமர்ந்து பஸ் வரும்போது சாலை குறுக்கே ஓடி செல்கின்றனர். இதனால் சிலர் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே அந்த பகுதியில் பயணியர் நிழற்கூடம் அவசியம் அமைக்க வேண்டும்.