நிழற்கூடங்கள் அமைக்கப்படுமா?

Update: 2026-10-11 15:00 GMT

தலைவாசல் ஊராட்சி மும்முடியில் தலைவாசல் ஒன்றிய அலுவலகம் உள்ளது. அந்த பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, போலீஸ் நிலையம், அரசு மகளிர் விடுதி என பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. தினந்தோறும் அலுவலகத்திற்கு வரும் பணியாளர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் சாலை ஓரம் நின்று பஸ்சில் ஏறி பயணம் செல்கின்றனர். எனவே தலைவாசல் ஒன்றிய அலுவலகம் எதிரில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்