நாமக்கல் நகரில் திருச்சி செல்லும் சாலையில் மேம்பாலம் அருகில் பல்வேறு வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. இந்த சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. பகலில் தெரியும் இந்த வேகத்தடை இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பலரும் அந்த வேகத்தடையில் வேகமாக வந்து விபத்தை சந்திக்கும் நிலை உள்ளது. வேகத்தடை இருப்பது தெரியாமல் பிரேக் பிடிப்பதின் காரணமாக பின்னால் வரக்கூடிய வாகனங்கள் மோதும் நிலை உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த இடத்தில் ஆய்வு செய்து, அங்கு விபத்துகள் நிகழாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.