விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுகின்றது. இதனால் தினமும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் செல்லும் இடங்களுக்கு கால தாமதத்துடன் செல்லும் சூழ்நிலை உருவாகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் நிலுவும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுப்பார்களா?