விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் சில தினங்களாகவே கொசுத் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் குடியிருப்பு வாசிகள் குறிப்பாக குழந்தைகள், சிகிச்சை பெரும் முதியவர்கள் இரவில் தூக்கமின்றி மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் கொசுக்கடியால் குழந்தைகளுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.