நாமக்கல்-சேந்தமங்கலம் சாலை ஆர்.பி.புதூர் பகுதியில் குறுகிய சாலை, வளைவுகளில் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு லாரிகள் செல்வதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளின் போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும். நாமக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து செல்லும் லாரிகளை வேட்டாம்பாடி அருகே ரிங்ரோடு வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.