மருத்துவமனையில் வாகன நிறுத்தத்துக்கு கட்டுப்பாடு

Update: 2026-10-11 13:38 GMT

திருச்சி மாவட்டம் மணப்பாறை - கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த போதிய இடமின்றி சிரமப்படுகின்றனர். விராலிமலை பகுதியில் உள்ள நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வோர் தங்களது இருசக்கர வாகனங்களை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்துவதால் ஆம்புலன்ஸ் வந்து செல்வதற்கும் கூட இடையூறு ஏற்படுகிறது. எனவே மருத்துவமனைக்கு தொடர்பில்லாதவர்கள் வாகனங்களை நிறுத்துவதை கட்டுப்படுத்தி, நோயாளிகளின் வாகன நிறுத்தத்துக்கு உரிய வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்