தடையை மீறும் சுற்றுலா பயணிகள்

Update: 2026-10-11 13:38 GMT

ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை காவிரி ஆற்றுப்பகுதியில் அதிக சுழல்களும், ஆபத்து நிறைந்த பகுதியாகவும் உள்ளது. இதனால் இந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் அடிக்கடி நீரில் மூழ்கி பலியாகும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. அதை தடுக்கும் நோக்குடன் அரசு சார்பில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் யாரும் அந்த எச்சரிக்கை பலகைகளை பொருட்படுத்துவதில்லை. ஆபத்தை உணராமல், அரசின் தடையை மீறி சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்