மது விற்பனையை தடுக்க கோரிக்கை

Update: 2026-10-11 13:37 GMT

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடை பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பும், இரவு நேரத்திலும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுவதுடன், தகராறுகளும் நிகழ்வதாக கூறப்படுகிறது. எனவே அனுமதியற்ற நேரங்களில் நடைபெறும் மது விற்பனையை தடுத்து, உரிய கண்காணிப்பை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்