பென்னாகரம் இந்திரா காந்தி சிலை நால்ரோடு பகுதி சாலையில் ஆறு போல சாக்கடை நீர் ஓடுகிறது. இந்த சாலை தர்மபுரி-ஒகேனக்கல் பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. ஒகேனக்கல் செல்லும் சுற்றுலா பயணிகளும் இந்த வழியாக தான் சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள வீட்டுக்கழிவு மற்றும் ஓட்டல் கழிவுகளை சாலையிலேயே விடுகின்றனர். இதனால் சாலையில் சாக்கடை நீர் ஆறு போல ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.