கிருஷ்ணகிரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான பகுதிகளில் சாக்கடை கழிவுநீர் செல்லும் வாய்க்கால் தூர்வாரப்படாமல் இருந்து வருகிறது. இவற்றில் தேங்கி நிற்கும் அசுத்த நீரால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே பருவமழை தீவிரம் அடையும் முன்பு சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும். இதேபோல் அனைத்து பகுதிகளிலும் கொசு புகை மருந்து அடிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.