கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீட்டர் தொலைவில் சுங்கச்சாவடி அமைந்து உள்ளது. இந்த சுங்கச்சாவடிக்கு முன்பு சுமார் 100 மீட்டர் தொலைவில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவர் அகற்றப்பட்டு உள்ளது. இந்த இடைவெளி வழியாக ஏராளமான வாகன ஓட்டிகள் மிகவும் அபாயகரமான முறையில் சாலையை கடந்து வருகின்றனர். இதில் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நடந்த வண்ணம் உள்ளன. எனவே இந்த இடைவெளியை அடைத்து பெரும் விபத்தை தவிர்க்க வேண்டும்.