ஓசூர் கே.சி.சி. நகரில் இருந்து ஆனந்த நகர், சின்ன எலசகிரி செல்லும் சாலை, வைகை நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக இருந்து வருகிறது. கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள், வாகனங்களில் செல்வோரை விரட்டிச் சென்று அச்சுறுத்துகின்றன. மேலும் நாய்களின் தொல்லையால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீட்டை விட்டு வெளியே செல்லவே மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே, மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.