கோபி ஒன்றியம் பெருந்தலையூர் ஊராட்சிக்குட்பட்ட குட்டிபாளையம் பகுதியில் நூலக வசதி இல்லை. இதனால் அந்த பகுதி மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் கடும் அல்லல்படும் நிலை உள்ளது. எனவே குட்டிபாளையம் பகுதியில் நூலக வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.