தெருநாய்கள் தொல்லை

Update: 2026-10-11 10:53 GMT

அந்தியூர் பஸ் நிலையம் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிகின்றன. அவை ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு கொள்வதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். நடந்து செல்பவர்களையும் கடித்து குதறி வருகின்றன. நாளுக்கு நாள் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் ரோட்டில் செல்ல வேண்டி உள்ளது. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்