புதுக்கோட்டை மாவட்டம் கேசராபட்டியில் இருந்து பொன்னமராவதி பஸ் நிலையம் செல்லும் சாலையில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது நாய்கள் குறுக்கே பாய்வதால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.