மூடியில்லாத கழிவுநீர் கால்வாய்

Update: 2026-10-04 13:05 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், மூவரசம்பேட்டை, ராகவா நகர் 10-வது தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் நீண்ட நாட்களாக மூடி ஏதுமின்றித் திறந்து கிடக்கிறது. இதனால், அந்த வழியாகச் செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, பெரிய அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, கழிவுநீர் கால்வாய்க்கு புதிய மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்