சென்னை அண்ணா நகர், ரங்கநாதன் கார்டன் 5-வது தெருவில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகம் போதிய பராமரிப்பு இல்லாமல் குப்பை மற்றும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. இதனால் அலுவலகத்தில் பணிபுரிவோர் மட்டுமின்றி அங்கு வரும் பொதுமக்களுக்கும் நோய் பாதிப்பு ஏற்படும் அவலம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.