பராமரிப்பு இல்லாத சுரங்கப்பாதை

Update: 2026-09-27 12:56 GMT

சென்னை பல்லாவரம், ரெயில் நிலைய சாலையில் சுரங்கப்பாதை ஒன்று உள்ளது. இந்த சுரங்கபாதையை நாள்தோறும் ஏராளமான பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் போதிய மின்விளக்குகள் இல்லாமலும், முறையான பராமரிப்பு இல்லாமலும் கிடக்கிறது. இதன் வழியாக இரவு நேரங்களில் பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும், அசுத்தமாக கிடப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்