பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?

Update: 2026-09-20 14:22 GMT
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா இருக்கன்துறை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொன்னார்குளத்தில் பயணிகள் நிழற்குடை மிகவும் பழுதடைந்து உள்ளது. காங்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் நீட்டிக்கொண்டு உள்ளன. எந்த நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்