கொட்டாரம் பிள்ளையார் தெருவில் கொட்டாரம் கிழக்கு கிராம நிர்வாக அலுவலகமும், கால்நடை ஆஸ்பத்திரியும் உள்ளது. இந்த கிராம அலுவலகம், கால்நடை ஆஸ்பத்திரி வளாகத்தில் நிற்கும் மரங்களின் கிளைகள் பிள்ளையார் தெருவை தாண்டி வடக்கு பகுதியில் உள்ள கட்டிடங்களின் மேல் பகுதி வரை வளர்ந்துள்ளது. மரக்கிளைகளின் கீழ் பகுதியில் மின்கம்பிகள் செல்கின்றன. மரக்கிளைகளால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மரக்கிளைகளை வெட்டி அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.