விபத்து அபாயம்

Update: 2026-09-13 10:46 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் களரி பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. மேலும் மேற்கூறைகளும் அவ்வப்போது பெயர்ந்து கிழே விழுவதால் வாடிக்கையாளர்கள் மிகவும் அச்சமடைந்து பொருட்களை வாங்கிச்செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. விபத்து ஏதேனும் நிகழ்வதற்கு முன்பு சேதமடைந்து உள்ள ரேஷன் கடையை அகற்றிவிட்டு புதிய ரேஷன் கடை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்