சுற்றுச்சுவர் இல்லாத அங்கன்வாடி மையம்

Update: 2026-09-13 09:48 GMT

உடுமலை பெரிய வாளவாடி ஊராட்சி பகுதியில் பெருமாள் கோவில் அருகில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதன் மூலமாக அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள் அடிப்படை கல்வி பெற்று வருகிறார்கள். தற்போது இந்த மையம் சமூகவிரோதிகளின் செயல்பாட்டின் காரணமாக பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது. இந்த கட்டிடத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டவில்லை. இதை சாதகமாகக் கொண்டு இரவு நேரத்தில் போதை ஆசாமிகள் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் மது பாட்டில்களை உடைத்து வீசி எறிவதுடன், குப்பைகளும் கட்டிடத்துக்கு அருகில் கொட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சுகாதார கேடு நிலவுவதுடன் பாட்டில் துண்டுகளால் குழந்தைகள் பாதிக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே பெரிய வாளவாடியில் உள்ள அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செந்தில், உடுமலை.

மேலும் செய்திகள்