ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2026-09-13 09:02 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லெப்பைகுடிகாடு பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் வளைந்து செல்வதற்கு இடையூறாக அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதால் பஸ்கள் உள்ளே சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் இப்பகுதிக்கு வந்து செல்லும் பொதுமக்களும், பயணிகளும் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். எனவே பஸ் நிறுத்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து இடையூறுகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்