அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி கரடிகுளம் 20-வது வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பிரதானமாக விளங்கும் ஏரியின் குளக்கரையில் கருவேல மரங்களும், குளத்தில் அல்லி செடிகளும், பாசிகளும் சூழ்ந்து காணப்படுகின்றன. இதனால் இப்பகுதி பொதுமக்கள் ஏரியை பயன்படுத்த மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ஏரியில் சூழ்ந்துள்ள கருவேல மரங்கள் மற்றும் பாசிகளை அகற்றி ஏரியை முழுமையாக தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.