குளச்சலில் கடற்கரைக்கு செல்லம் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் பொதுமக்கள், பள்ளிமாணவ-மாணவிகள் நடந்து செல்வதற்காக கழிவுநீர் ஓடையின் மீது சிமெண்டு சிலாப்புகளை போட்டு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சில இடங்களில் சிமெண்டு சிலாப்புகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் நிலைதடுமாறி ஓடையில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதசாரிகள் நலன்கருதி சேதமடைந்த சிலாப்புகளை அகற்றி விட்டு புதிய சிலாப்புகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வினு ஆன்றோ, குளச்சல்.