நடவடிக்கை தேவை

Update: 2026-09-13 07:50 GMT

குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கான்வென்ட் சந்திப்பிற்கு அருகில் ஒரு பழைய கார் பல மாதங்களாக கேட்பாரற்ற நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சாலையோரம் நடைபாதையை ஆக்கிரமித்தவாறு நிற்கும் இந்த காரால் பாதசாரிகள், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே, கேட்பாரற்று காணப்படும் காரை அதிகாரிகள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தேவசகாயம், குலசேகரம்.

மேலும் செய்திகள்