கோவை மாநகராட்சி 44-வது வார்டுக்கு உட்பட்ட சாய்பாபாகாலனி கே.கே.புதூர் 8-வது வீதியில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவை அந்த வழியாக நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்திச்சென்று கடிக்க முயல்கின்றன. இதனால் சாலையில் செல்லவே பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அங்கு ெதருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்.