கோவை மாநகராட்சி 53-வது வார்டுக்கு உட்பட்ட சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் காந்தி நகர் பகுதியில் பொது கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடம் கடந்த 3 மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக கழிப்பிடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும்.