செஞ்சி பேரூராட்சி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. தெருக்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு தெருநாய்கள் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதுடன், பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று நகர மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.