திண்டுக்கல் திருமலைசாமிபுரம் 3-வது தெருவில் உள்ள சாக்கடை கால்வாய் மீது கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற வேண்டும்.