நிழற்குடை அமைக்க வேண்டும்

Update: 2026-09-06 11:03 GMT

நாகர்கோவில் அனந்தன்பாலம் பகுதியில் ஒரு பஸ் நிறுத்தும் உள்ளது. தினமும் நாகர்கோவில் நகர்புறத்துக்கு வரும் பயணிகள், தொழிலாளர்கள் இந்த நிறுத்தத்தில் பஸ்சிற்காக காத்திருக்கின்றன. ஆனால், இந்த பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் அருகில் உள்ள கடைகளின் வாசலிலும், மர நிழலிலும் ஒதுங்கி நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான மாணவ-மாணவிகள் நிழற்குடை இல்லாததால் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பயணிகள் நலன்கருதி அந்த இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஸ்ரீராம், ஆசாரிபள்ளம்.

மேலும் செய்திகள்