பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டி ஊராட்சியில் சாலை பணிகள் முடிவடைந்து 5 மாதங்கள் ஆகியும் இதுவரை நடைபாலம் அமைத்து தரப்படவில்லை. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்டோர் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அப்பகுதியில் உடனடியாக நடைபாலம் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.