மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது. இந்த தெருநாய்கள் அப்பகுதி சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிவதுடன் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்கிறது. மேலும் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தையும் ஏற்படுத்தி செல்கின்றது. எனவே இவ்வாறு தொடர் தொல்லையில் ஈடுப்பட்டு வரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?