ராணிப்பேட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை நடக்கிறது. நகராட்சி பல கோடி ரூபாய் செலவில் புதிதாக கடைகளும், கழிவறைகளும் கட்டி உள்ளது. அதை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமலே மூடி வைத்துள்ளனர். ராணிப்பேட்டை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து புதிய கடைகள், கழிவறைகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-நித்தியானந்தம், காரை.