வாலாஜாவை அடுத்த தகரகுப்பம் ஊராட்சியில் பஸ் நிறுத்தம் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்த நூலக கட்டிடம் சேதம் அடைந்ததால், அதற்கு பதில் புதிய நூலக கட்டிடம் கட்டப்பட்டது. புதிய கட்டிடம் கட்டப்பட்டு இன்று வரை திறக்கப்படாமல் பூட்டியே வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய நூலக கட்டிடத்தை திறக்க வேண்டும்.
-ரமேஷ், தகரகுப்பம்.