விபத்து அபாயம்

Update: 2026-08-30 18:20 GMT

மதுரை நகர் பழங்காநத்தத்தை அடுத்த வசந்த நகர்-காளவாசல் இடையே உள்ள பாலம் சேமடைந்து பக்கவாட்டு தடுப்பு சுவர்கள் சேதமடைந்து அபாய நிலையில் உள்ளது. மேலும் சில இடங்களில் கம்பிகள் பெயர்ந்தும் சில இடங்களில் கம்பிகளே இல்லாமல் அபாயக்காட்சி அளிக்கின்றது. இதனால் இப்பாலத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே செல்கின்றனர். எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பாலத்தினை விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்