ஏரியூரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நுழைவுவாயில் பகுதியில், சாக்கடை கால்வாய்க்காக போடப்பட்ட கான்கிரீட்டுகள் உடைந்து, கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டு உள்ளது. மேலும் ஆபத்தான குழியும் உள்ளது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், தவறுதலாக குழிக்குள் காலை விட்டு, விபத்து நேர அதிக வாய்ப்பு உள்ளது. கம்பிகளும் நீட்டி கொண்டுள்ளதால் அசம்பாவிதங்கள் ஏற்படலாம். இந்த அவல நிலையை உடனடியாக சரி செய்து பள்ளி குழந்தைகளுக்கு விபத்து ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.