தெருநாய்கள் தொல்லை

Update: 2026-08-30 13:45 GMT

கோவை நேரு விளையாட்டு மைதானத்துக்கு தினமும் ஏராளமான வீரர்கள் வந்து செல்கின்றனர். அதுபோன்று அதன் அருகில் உள்ள வ.உ.சி. பூங்கா பகுதிக்கும் பலரும் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். ஆனால் அந்த பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவை சாலைகளில் நடந்து செல்வோரை துரத்துகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் விட்டு வைப்து இல்லை. இதனால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்